Saturday, 24 October 2020

திருவள்ளுவர் விளிக்கிறார்.....

உழுதுண்டு வாழ்வாரே!

திருக்குறள்:  1033

அதிகாரம்: 104

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந் 

தொழுதுண்டு பின்செல் பவர்.

இந்தக்குறட்பாவை வள்ளுவர் வேறுதளத்தில் பொருள்கொள்ளும்படி உருவாக்கியுள்ளார்.

இதன்பொருளைக் காண்போம்.

(காலையில் எழுந்து, மாடுகளுடன் நிலத்திற்குச் சென்று, நிலத்தை) உழுது,  (அதன்பிறகு, தன்னுடன் கொண்டுசென்ற காலையுணவை) உண்டு வாழ்பவர்(களாகிய உழவர்)களே!

(நீங்கள் வாழுகின்ற இதே ஊரில் வாழுகின்ற வேறுதொழில்புரிகின்ற) மற்றவர்களெல்லாம், (காலையில் எழுந்து, தத்தமது இறையைத்) தொழுது, (அதன்பிறகு தமது காலையுணவை) உண்டு, பின் (தத்தமது தொழில்களைச்செய்யப் புறப்பட்டுச்) செல்கின்றனர்.

ஈராயிரம் ஆண்டுகளாக இத்தமிழ்நாட்டில் உழவர்களது வாழ்நிலை இவ்வாறுதான் தொடர்கிறது.......

உழவர்கள்: 

              தமது உழவுத்தொழிலை முதலில் செய்து பின் உண்கின்றனர்.

பிறதொழில்புரிவோர்:

            முதலில் உணவையுண்டு பின்னர் தத்தமது தொழில்களைச் செய்கின்றனர்.

Wednesday, 3 October 2018

திருக் குறள்

திருக்குறளைப் படிக்க,
திணறினர்  மாணவர்.....

பிரித்து எழுதிக் காண்பித்தேன்....

தெளிவாகப் படித்தனர்
திருக்   குறள்.

Thursday, 23 August 2018

கவிதை

கல்விச்செயலர் இடமாற்றம்
========================

இது,
இன்றைய
ஆட்சியில்
ஏற்பட்ட
இரண்டாவது
'சந்திர'கிரகணம்.

Monday, 16 October 2017

வாழுங்கவிஞர்கள்......

வாழுங்கவிஞர்கள்......
=======================

கவிதைகளைப்போலவே
கவிஞர்களுக்கும்
என்றுமே மரணமில்லை......
அவர்கள் இறந்தபின்னரும்
வாழ்கிறார்கள் என்பதை
அறிந்ததும் அரண்டுபோனேன்.
ஆம்,
பிளஸ்டூ பொதுத்தமிழில்
சுரதாவும், அப்துல் ரகுமானும்
2017 பதிப்பில்
இன்றும்
'வாழுங்கவிஞர்களாய்' ......

Monday, 14 August 2017

கொடியேற்றம்

கொடியேற்றம்
=============

சிறைசென்று
மீண்டவர்களால்
ஏற்றப்பட்டு
கொண்டாடப்படுகிறது
இந்தியவிடுதலைக்கு
முன்னும்  பின்னும்
தேசியக்கொடி.

Saturday, 20 May 2017

இதற்கா அவ்வளவு ஊதியம்?

2005 ஆம் ஆண்டு இந்த மேனிலை இரண்டாமாண்டு பொதுத்தமிழ் பாடநூல் அறிமுகமானது.

இன்று 2017.  பன்னீராண்டுகள் நிறைவெய்திவிட்டன. இதுவன்று நான் கூறவந்தது.

இளங்கலை - மூன்றாண்டு
முதுகலை  -  ஈராண்டு
கல்வியியல் - ஓராண்டு. ஆக, ஆறாண்டுகள் பயின்றவொருவர் அதன்பின் ஓராண்டுகழித்து பணியமர்ந்தாலும்,
தான் மேனிலையில் பயின்ற புத்தகத்தை ஐந்தாண்டுகள் கற்றுத்தருபவராகிறார்.

தான்படித்தபுத்தகத்தைக்கற்றுத்தருவதற்கு அரசுதரும் ஊதியம் எத்தனையாயிரம் தெரியுமா?(பிறபாடங்களுக்கும் இது பொருந்தும்)

வாழ்க தமிழாசிரியர்கள்!