Saturday 25 March 2017

யாரெல்லாம் நூலாசிரியர்கள்?

யாரெல்லாம் நூலாசிரியர்கள்? ============================

சமச்சீர்க்கல்வி - 1 முதல் 10 வகுப்பு அனைத்துப்- பாடப்புத்தகங்கள் எழுதிய நூலாசிரியர்கள், மேலாய்வாளர்கள், குழுத்தலைவர்கள் பெயர்கள் அந்தந்த பாடநூல்களிலிருந்து நீக்கப்பட்டு அச்சிடப்பட்டுள்ளன.         

     அவர்கள் பாடநூல் எழுதியதற்கான ஊதியத்தை பணமாகப்பெற்றிருப்பார்கள்.  ஆனால், அவர்களது -"CREATIVE" - படைப்பாக்கமின்றி  பாடநூல்  அதில் இடம்பெற்றுள்ள படங்கள், பயிற்சிகள் உருவாகியிருக்கமுடியுமா? 

அதேவேளையில், பன்னீராண்டுகளுக்கு முன்னெழுதப்பெற்று இன்றுவரையில் நடைமுறையிலுள்ள மேனிலைமுதலாமாண்டு மற்றும் மேனிலையிரண்டாமாண்டு பாடநூல்களில் அந்தந்தப்பாடப்புத்தகங்கள் எழுதிய நூலாசிரியர்கள், மேலாய்வாளர்கள், குழுத்தலைவர்கள் பெயர்கள் முறையாக அச்சிடப்பட்டுள்ளனவே?  அவர்களுக்குமட்டும் ஒரு நீதியோ?

Wednesday 15 March 2017

கவிதை

பணமதிப்பிழப்பு
================

ஐநூறு    ஆயிரம்

ரூபாய்த்தாள்கள்

செல்லாதென

அரசு அறிவித்த

நடவடிக்கையால்

வெள்ளையாய் ஈட்டிய

என் ஊதியப்பணம்

பத்தாயிரம்

கருப்பாகிப்போனது........