Saturday 24 October 2020

திருவள்ளுவர் விளிக்கிறார்.....

உழுதுண்டு வாழ்வாரே!

திருக்குறள்:  1033

அதிகாரம்: 104

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந் 

தொழுதுண்டு பின்செல் பவர்.

இந்தக்குறட்பாவை வள்ளுவர் வேறுதளத்தில் பொருள்கொள்ளும்படி உருவாக்கியுள்ளார்.

இதன்பொருளைக் காண்போம்.

(காலையில் எழுந்து, மாடுகளுடன் நிலத்திற்குச் சென்று, நிலத்தை) உழுது,  (அதன்பிறகு, தன்னுடன் கொண்டுசென்ற காலையுணவை) உண்டு வாழ்பவர்(களாகிய உழவர்)களே!

(நீங்கள் வாழுகின்ற இதே ஊரில் வாழுகின்ற வேறுதொழில்புரிகின்ற) மற்றவர்களெல்லாம், (காலையில் எழுந்து, தத்தமது இறையைத்) தொழுது, (அதன்பிறகு தமது காலையுணவை) உண்டு, பின் (தத்தமது தொழில்களைச்செய்யப் புறப்பட்டுச்) செல்கின்றனர்.

ஈராயிரம் ஆண்டுகளாக இத்தமிழ்நாட்டில் உழவர்களது வாழ்நிலை இவ்வாறுதான் தொடர்கிறது.......

உழவர்கள்: 

              தமது உழவுத்தொழிலை முதலில் செய்து பின் உண்கின்றனர்.

பிறதொழில்புரிவோர்:

            முதலில் உணவையுண்டு பின்னர் தத்தமது தொழில்களைச் செய்கின்றனர்.

No comments:

Post a Comment