Monday, 18 December 2017
Monday, 16 October 2017
வாழுங்கவிஞர்கள்......
வாழுங்கவிஞர்கள்......
=======================
கவிதைகளைப்போலவே
கவிஞர்களுக்கும்
என்றுமே மரணமில்லை......
அவர்கள் இறந்தபின்னரும்
வாழ்கிறார்கள் என்பதை
அறிந்ததும் அரண்டுபோனேன்.
ஆம்,
பிளஸ்டூ பொதுத்தமிழில்
சுரதாவும், அப்துல் ரகுமானும்
2017 பதிப்பில்
இன்றும்
'வாழுங்கவிஞர்களாய்' ......
Monday, 14 August 2017
கொடியேற்றம்
கொடியேற்றம்
=============
சிறைசென்று
மீண்டவர்களால்
ஏற்றப்பட்டு
கொண்டாடப்படுகிறது
இந்தியவிடுதலைக்கு
முன்னும் பின்னும்
தேசியக்கொடி.
Saturday, 20 May 2017
இதற்கா அவ்வளவு ஊதியம்?
இன்று 2017. பன்னீராண்டுகள் நிறைவெய்திவிட்டன. இதுவன்று நான் கூறவந்தது.
இளங்கலை - மூன்றாண்டு
முதுகலை - ஈராண்டு
கல்வியியல் - ஓராண்டு. ஆக, ஆறாண்டுகள் பயின்றவொருவர் அதன்பின் ஓராண்டுகழித்து பணியமர்ந்தாலும்,
தான் மேனிலையில் பயின்ற புத்தகத்தை ஐந்தாண்டுகள் கற்றுத்தருபவராகிறார்.
தான்படித்தபுத்தகத்தைக்கற்றுத்தருவதற்கு அரசுதரும் ஊதியம் எத்தனையாயிரம் தெரியுமா?(பிறபாடங்களுக்கும் இது பொருந்தும்)
வாழ்க தமிழாசிரியர்கள்!
Saturday, 25 March 2017
யாரெல்லாம் நூலாசிரியர்கள்?
யாரெல்லாம் நூலாசிரியர்கள்? ============================
சமச்சீர்க்கல்வி - 1 முதல் 10 வகுப்பு அனைத்துப்- பாடப்புத்தகங்கள் எழுதிய நூலாசிரியர்கள், மேலாய்வாளர்கள், குழுத்தலைவர்கள் பெயர்கள் அந்தந்த பாடநூல்களிலிருந்து நீக்கப்பட்டு அச்சிடப்பட்டுள்ளன.
அவர்கள் பாடநூல் எழுதியதற்கான ஊதியத்தை பணமாகப்பெற்றிருப்பார்கள். ஆனால், அவர்களது -"CREATIVE" - படைப்பாக்கமின்றி பாடநூல் அதில் இடம்பெற்றுள்ள படங்கள், பயிற்சிகள் உருவாகியிருக்கமுடியுமா?
அதேவேளையில், பன்னீராண்டுகளுக்கு முன்னெழுதப்பெற்று இன்றுவரையில் நடைமுறையிலுள்ள மேனிலைமுதலாமாண்டு மற்றும் மேனிலையிரண்டாமாண்டு பாடநூல்களில் அந்தந்தப்பாடப்புத்தகங்கள் எழுதிய நூலாசிரியர்கள், மேலாய்வாளர்கள், குழுத்தலைவர்கள் பெயர்கள் முறையாக அச்சிடப்பட்டுள்ளனவே? அவர்களுக்குமட்டும் ஒரு நீதியோ?
Wednesday, 15 March 2017
கவிதை
பணமதிப்பிழப்பு
================
ஐநூறு ஆயிரம்
ரூபாய்த்தாள்கள்
செல்லாதென
அரசு அறிவித்த
நடவடிக்கையால்
வெள்ளையாய் ஈட்டிய
என் ஊதியப்பணம்
பத்தாயிரம்
கருப்பாகிப்போனது........